முக்கிய அலர்ட் : ஆதாரில் இந்த விஷயங்களை உடனே பண்ணிடுங்க

இந்தியர்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான ஆவணமான ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( UIDAI) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இது அரசு திட்டங்களுக்கும் பல்வேறு சேவைகளுக்கும் அவசியமான ஆவணமாகும்.

ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை விண்ணப்பிப்பது கட்டாயம். அதேசமயம், அட்டையில் உள்ள சில விவரங்களை புதுப்பிப்பதும் அவசியமாகும். அது ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள இ சேவை மையம் மூலம் செய்யலாம். பயனர் தங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை MyAadhaar போர்டல் வழியாக ஆன்லைனில் புதுப்பிக்கலாம்.

கைரேகை ஸ்கேன் மற்றும் புகைப்பட பதிவேற்றம் போன்ற பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்காக அருகிலுள்ள இ சேவை மையம் செல்ல வேண்டும்.

2026 ஜூன் 14ஆம் தேதி வரை இ சேவை மையங்களில் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம். அதன்பிறகு மேற்கண்ட கட்டணங்கள் அமலுக்கு வரும். எனவே, விரைந்து புதுப்பிப்பது நல்லது.

UIDAI 2025 டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஆதார் பான் கார்டு இணைப்பு கட்டாயம் என்றும் அறிவித்துள்ளது. இதற்கு பிறகு பான் கார்டுகள் ஜனவரி 1, 2026 முதல் செயலிழக்கப்படும்.

அதனால், ஆதார் பான், பான் இணைக்காதவர்கள் உடனே அருகிலுள்ள இ சேவை மையம் சென்று இணைப்பை முடித்துக் கொள்ள வேண்டும். மேலும், அனைத்து வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் e-KYC பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு ஆதார் OTP அடிப்படையிலான அங்கீகாரம் அல்லது வீடியோ KYC செய்யலாம்.

Related News

Latest News