UPI பரிவர்த்தனை: நவம்பர் 3ஆம் தேதி முதல் முக்கிய மாற்றம்

இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் லட்சக்கணக்கான மக்கள் யுபிஐ (UPI) மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பரிவர்த்தனைகள் நவம்பர் 3ஆம் தேதியில் இருந்து ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டு வர உள்ளது.

இப்போது, யுபிஐ பரிவர்த்தனைகள் தினமும் பத்து செட்டில்மெண்ட் சுழற்சிகளில் (Settlement cycles) செயல்படுத்தப்படுகின்றன. இந்த சுழற்சிகள் இரு வகைப்படி பிரிக்கப்படுகின்றன:

அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள்: இது எளிதாக, நாம் ஒரு நபருக்கு பணம் அனுப்புவதோ அல்லது பெறுவதோ போன்ற பரிவர்த்தனைகளை குறிக்கின்றது.

சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள்: இது பண பரிவர்த்தனைச் செயல்பாட்டில் சிக்கல்கள் ஏற்பட்டு, பரிவர்த்தனை முடிவடையாமல் நிறுத்தப்பட்டிருக்கின்றது. உதாரணமாக, பணம் ஏற்கனவே அனுப்பியவுடன், அது பாதியிலேயே நிறுத்தப்பட்டாலோ அல்லது மீண்டும் திரும்பி வந்தாலோ, அது டிஸ்பியூட் பரிவர்த்தனை எனப்படும்.

புதிய மாற்றங்கள்

நவம்பர் 3 முதல், எம்பிசிஐ (RBI) புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வருகிறது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள் தனித்தனியாக கையாளப்படும்.

இந்த சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளுக்காக பிரத்தியேகமாக டிசி1 மற்றும் டிசி 2 என இரண்டு புதிய சுழற்சிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலான 10 சுழற்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே கையாளப்படும் என்றும் நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை என இரண்டு சுழற்சிகள் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளுக்கு என மாற்றப்படுகின்றன .

இந்த மாற்றங்கள், யுபிஐ பணப்பரிவர்த்தனைகளின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது, மேலும், அதன் செயல்பாட்டை எளிமையாகவும் துரிதமாகவும் மாற்றுகிறது.

Related News

Latest News