கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. இந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விஜய் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்ததுடன், பலியான 41 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு செய்தார். அதன்படி இந்த தொகை நேரடியாக வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து, தனிப்பட்ட முறையில் ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களில் ஒருவராக கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி சங்கவி, விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் நிதியை திருப்பி கொடுத்துள்ளார்.
இது குறித்து சங்கவி தெரிவித்ததாவது: நான் தான் என் கணவனை இழந்தவன். எனக்குப் பதிலாக என் உறவினரை சென்னைக்கு அழைத்துச் சென்று விஜய் சந்தித்தது தவறு. நான் நேராக விஜயிடம் என் துயரத்தை பகிர்ந்திருக்க விரும்பினேன்,” என சங்கவி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, என்னைப் புறக்கணித்தது எனக்கு வேதனை அளிக்கிறது. அதனால் விஜய் வழங்கிய ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிவிட்டேன். பணம் எனக்கு முக்கியமல்ல; மரியாதை தான் முக்கியம்,” என சங்கவி உணர்ச்சி வசப்பட்டு தெரிவித்துள்ளார்.
