Sunday, December 28, 2025

வங்கிக் கணக்கில் வரப்போகுது புது அப்டேட்., நவம்பர் 1 முதல் அமல்

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ஏதாவது ஒரு வங்கியில் தங்களது பெயரில் கணக்குகளைத் தொடங்கி பராமரித்து வருகின்றனர். அந்த வங்கிக் கணக்கிற்கு வாரிசுதாரரும் நியமிக்கப்படுகிறார்.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் ஒருவர், தனது வங்கிக் கணக்கில் அதிகபட்சம் நான்கு நாமினிகளைச் சேர்க்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ஒரேநேரத்தில் அல்லது தொடர்ச்சியாக நான்கு பேர் வரை நாமினிகளாக நியமிக்கலாம் எனவும், வைப்பாளர்கள் நான்கு பேர் வரை நாமினிகளாக நியமித்து, ஒவ்வொரு நாமினிக்கும் உரிமைப் பங்கு அல்லது சதவீதத்தைக் குறிப்பிடலாம் எனவும் தெரிவித்துள்ளது. இது, நவம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அது தெரிவித்துள்ளது.

Related News

Latest News