Thursday, February 5, 2026

ஒரே ஒரு கரப்பான் பூச்சியால் ஏற்பட்ட விபரீதம்., ஒருவர் பலி, 8 பேர் பாதிப்பு

தென் கொரியாவில் பெண் ஒருவர் கரப்பான் பூச்சியை கொல்வதற்காக ஒரு லைட்டருடன் எரியக்கூடிய ஸ்ப்ரே பயன்படுத்தியுள்ளார். ஸ்பிரே வீட்டில் இருந்த பொருட்களில் தீப்பிடித்தது. தீ விரைவில் பக்கத்து குடியிருப்புகளுக்கும் பரவியது.

30 வயது பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் இரண்டு மாத குழந்தையுடன் ஐந்தாவது மாடியில் வசித்து வந்தார். தீ அவர்களின் வீட்டிற்கும் பரவியது. தீயில் இருந்து தப்பிக்க முயன்றபோது அந்தப் பெண் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து இறந்தார்.

தீ மற்றும் புகை காரணமாக 8 பேர் வரை கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு காரணமான இளம் பெண்ணை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related News

Latest News