Sunday, December 28, 2025

பூங்காவில் கிடந்த 6 சவரன் நகை : காவல்நிலையத்தில் ஒப்படைத்த தாய் – மகனுக்கு பாராட்டு

வானகரத்தில் பூங்காவில் கிடந்த 6 சவரன் தங்க செயினை, காவல்நிலையத்தில் ஒப்படைத்த தாய் – மகனுக்கு பாராட்டுகள் குவிந்தன.

சென்னை வானகரம் அடுத்த திருவேற்காட்டில் உள்ள ராஜாங்குப்பத்தை சேர்ந்தவர் பவானி. இவர் தனது வீட்டின் அருகே இருக்கும் பூங்காவில் நடைபயிற்சி செய்த போது, தங்க நகை கிடந்ததை கண்டுள்ளார். இதனையடுத்து தனது மகனுடன் சென்று காவல்நிலையத்தில் தங்க நகையை ஒப்படைத்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், நகையை தொலைத்தவரை கண்டறிந்து, மீண்டும் அவரிடமே ஒப்படைத்தனர். பூங்காவில் கிடந்த 6 சவரன் தங்க செயினை, காவல்நிலையத்தில் ஒப்படைத்த தாய் – மகனுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Related News

Latest News