சென்னை கோட்டத்தில் கடந்த 15 நாட்களில் டிக்கெட் எடுக்காமல் ரயில்களில் பயணித்தவர்களிடம் இருந்து 2.86 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோருகு அபராதம் விதிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த செப்டம்பர் 25ம்தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை, 51 ஆயிரத்து 557 பேரிடம் இருந்து 2 கோடியே 86 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயுதபூஜை விடுமுறையின்போது டிக்கெட் இல்லாமல் பயணித்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்தனர் என்றும் குறிப்பாக மின்சார ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களே அதிகம் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
