தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மசோதாக்களை ஆளுநர் கையாளும் விதம் அரசமைப்புக்கு எதிரானது. ஆளுநரின் நடவடிக்கை தன்னிச்சையானது என்று அறிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
