திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா, வரதட்சணை கொடுமை காரணாமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ரிதன்யாவின் கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைதான மூவரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், கவின்குமாா், ஈஸ்வரமூா்த்தி மற்றும் சித்ரா தேவி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஜாமின் பெற்று வீடு திரும்பியபோது வீட்டில் ரிதன்யாவின் 2 செல்போன்களை கண்டெடுத்ததாகவும், அந்த செல்போன்களை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து ரிதன்யாவின் 2 செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
