திருப்பூரில் வியாபாரி தவறவிட்ட 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை, அரசு பள்ளி மாணவிகள் போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தாசநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவர் தங்க நகை வாங்க சென்ற போது, தான் வைத்திருந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை சாலையில் தவறவிட்டுள்ளார். இந்த நிலையில், பள்ளி மாணவிகள் சாலையில் இருந்த பணத்தை எடுத்து, ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் தாராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து விசாரணைக்கு பிறகு அந்த பணம் தங்க பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலையில் கிடந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவிகளின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.
