Sunday, December 28, 2025

தீபாவளியை முன்னிட்டு கிளாம்பாக்கம் போக்குவரத்தில் மாற்றம்

தீபாவளியை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்தில் மாற்றத்தில் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளியை பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்வார்கள். ஒரே நேரத்தில் பொதுமக்கள் சென்னையில் இருந்து புறப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.

அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு வருகிற 17,18,21,22 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் அறிவித்துள்ளது. மேலும், கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை மற்றும் புறப்பாடுப் பயண விபரங்களையும் காவல்துறை அறிவித்துள்ளது.

விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோருக்கு காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், பொத்தேரி ரயில் நிலையங்களிலிருந்து கூடுதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்றும் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

Latest News