தீபாவளி பண்டிகை வரும் 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக 15 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் பலரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். தீபாவளியை முன்னிட்டு மேலும் கூடுதல் சிறப்பு ரயில்கள் மற்றும் முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
