செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கூடுவாஞ்சேரி சிங்கப்பெருமாள் கோவில் ஊரப்பாக்கம் வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மசாஜ் சென்டர்கள் செயல் பட்டு வருகிறது
இந்நிலையில் நேற்று மறைமலை நகராட்சி அடிகளார் சாலையில், பாலியல் தொழில் நடப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து மறைமலை நகர் போலீசார், அடிகளார் சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர்.
அங்கு, செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 25- வயது மதிக்கத்தக்க மூன்று பெண்களை வைத்து, பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது. அவர்களை மீட்ட போலீசார், பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக, பீர்க்கன்காரணை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(36), தப்பி ஓடிய நிலையில் போலீசார் தேடி வருகின்றனர் மேலும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சச்சின், 24, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆதர படுத்தி சிறையில் அடைத்தனர்
