தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 9-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்பிஜி டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் 6 வது நாளாக தொடர்ந்து வந்த நிலையில் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க வேலை நிறுத்தத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
