Sunday, December 28, 2025

கரூர் சம்பவம் : உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், ஆறு மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. இன்று முதல் வரும் அக்டோபர் 17-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் கூட்டத்தொடா் நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவுக்கும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசின் முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகலாந்து மாநில முன்னாள் ஆளுநர் இல.கணேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோரின் மறைவுக்கும் தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related News

Latest News