Sunday, December 28, 2025

மழை வருமா? வராதா? தெரிஞ்சுக்க.. ‘இது’ இருந்தா போதும்!!

தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்குவதற்காக TN-Alert என்னும் கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த TN-Alert செயலி, மக்கள் எளிய முறையில் இயக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் தம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்து கொள்ளலாம்.

மேலும், இந்த செயலியில் அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக, தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா போன்ற தகவல்களை அவ்வப்போது அறிந்து கொள்ளும் வசதி உள்ளது.

பேரிடர் மற்றும் கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் புகார்களை பதிவு செய்யலாம். மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்தச் செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த TN-Alert செயலியை Google Play Store, IOS App Store-இல் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் குறித்த தகவல்களுக்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டுபாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் 9786566111 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News