Sunday, December 28, 2025

தீபாவளி விடுமுறை : தாறுமாறாக உயர்ந்த ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம்

வெளியூரில் தங்கி வேலை செய்பவர்கள் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், பலரும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து மதுரை, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

ஆம்னி பேருந்து டிக்கெட்களின் அதிரடி கட்டண உயர்வால், தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related News

Latest News