Sunday, December 28, 2025

கரூர் சம்பவம் : 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர் ஒட்டிய த.வெ.க

கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் 16-ம் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னையில் த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வெளியே நுழைவு வாசல் பகுதியில், அக்கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்கள் போஸ்டர்களில் இடம் பெற்று உள்ளன.

Related News

Latest News