Sunday, December 28, 2025

புதுக்கோட்டையில் வெறிநாய்கள் கடித்ததில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டையில் வெறிநாய்கள் விரட்டி, விரட்டி கடித்ததில் 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாய் தொல்லையால், பொதுமக்கள் தினமும் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக ஆயிஷா பானு, பொன்னுமணி, அஹமது ஹமீது ஆகிய மூன்று பேரை வெறிநாய் கடித்தது. அவர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

Latest News