Sunday, December 28, 2025

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், A1 குற்றவாளி உயிரிழப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், A1 குற்றவாளியாக சேர்க்கப்பட்ட வடசென்னை ரவுடி நாகேந்திரன் உயிரிழந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5ம்தேதி தனது வீட்டிற்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ1 குற்றவாளியாக நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்தனர்.

இந்த சூழலில் ஆயுள் தண்டனை கைதியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாகவும் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரன் உயிரிழந்தார். கல்லீரல் பாதிப்பால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related News

Latest News