Thursday, October 9, 2025

வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள்

வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 855 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துகழகம் அறிவித்துள்ளது.

அதன்படி கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை உள்பட பல இடங்களுக்கு நாளை 315 பேருந்துகளும், நாளை மறுநாள் 310 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 55 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மாதாவரத்திலிருந்து 2 நாட்களுக்கு தலா 20 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துகழகம் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News