Wednesday, October 8, 2025

அரசு அதிரடி உத்தரவு : 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க தடை

தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்ட மருந்து தயாரிக்கும் நிறுவனம் உற்பத்தி செய்த Coldrif syrup (Batch No. SR-13) சாப்பிட்ட குழந்தைகள் இறந்து போன சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள Kaysons Pharma நிறுவனம் தயாரித்த Dextromethorphan Hydrobromide Syrup IP மருந்தை சாப்பிட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குழந்தைகளும் இறந்து போன சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து அக்டோபர் 5ம் தேதி அன்று உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் குறிப்பிட்ட இந்த இருமல் மருந்து வாங்குவது, விற்பனை செய்வது மற்றும் சாப்பிடுவதற்கு தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாராமையா திங்கட்கிழமை அன்று சுகாதாரத் துறையினை இந்த விஷயம் குறித்து தீவிரமாக கவனிக்குமாறு கட்டளையிட்டார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் சிரப் பயன்படுத்துவதைத் தடைசெய்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News