Sunday, December 28, 2025

நோயாளி என்று சொல்லக்கூடாது : முதல்வர் மு.க ஸ்டாலின் போட்ட புது உத்தரவு

“மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சேவைகளைப் பெற வருபவர்கள் ‘நோயாளிகள்’ என அல்லாமல் ‘மருத்துவப் பயனாளிகள்’ என குறிப்பிடப்பட வேண்டும்” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவம் ஒரு மனிதநேயம் மிக்க சேவையாக உள்ளதால், “நோயாளி” என்ற சொல்லுக்கு பதிலாக “பயனாளி” என குறிப்பிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.

Related News

Latest News