Tuesday, October 7, 2025

போலீஸ் வாகனத்தை இடித்துவிட்டு மாடுகளை கடத்தி சென்ற வடமாநில வாலிபர்கள்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே நள்ளிரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது ஹரியானா வாகன எண் கொண்ட பொலிரோ (Bolero) வாகனத்தில் மாடுகளை ஏற்றிக்கொண்டு மூன்று வட மாநில அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை மடக்கி பிடித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயற்சித்துள்ளனர்.

இதையடுத்து இரவு ரோந்து பணியில் இருந்த மறைமலைநகர் குற்றப்பிரிவு போலீசார் விக்னேஷ் மற்றும் பிரபு ஆகியோர் தனது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றவர்களை பிடிக்க துரத்திச் சென்றுள்ளனர்.

அப்போது காவலர்கள் அந்த வாகனத்திற்கு முன்னால் சென்றவுடன் மாடுகளை திருடி கடத்திச் சென்ற வட மாநில வாலிபர்கள் போலீசார் மீது வாகனத்தை இடித்து விபத்து ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.

மாடு கடத்தலில் 3 வடமாநில நபர்கள் ஈடுபட்ட நிலையில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கமர் அலி வயது 30 என்பவனை மட்டும் போலீசார் பிடித்துள்ளனர். மீதமுள்ள இருவர் தப்பி ஓடி உள்ளனர்

இதற்கிடையே விபத்தில் அடிப்பட்டு கிடந்த இரண்டு காவலர்களை அந்த வழியாக வந்த சக வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்

தகவல் அறிந்த மறைமலைநகர் குற்றப்பிரிவு போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து வடமாநில வாலிபர் கமர் அலி என்பவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News