கரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, தமிழ்நாட்டில் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்குக் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
காலி இடங்கள் மற்றும் மைதானங்களில் மட்டுமே அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படும். சாலைகளில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
கூட்டங்களில் பெண்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும். விதி மீறினால், அந்த நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்படும்.
கூட்டத்தில் உயிரிழப்பு நடந்தால், ஏற்பாட்டாளர்களே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்ட பின்னரே இந்தக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.