Sunday, October 5, 2025

வீட்டில் பழைய சோபா, கட்டில்களை அகற்ற வேண்டுமா? புதிய சேவை அறிமுகம்!!

சென்னை மாநகரப் பகுதிகளில் தேவையற்ற மரச்சாமான்கள், துணிகள் மற்றும் மின்னணு கழிவுகளை அகற்ற மாநகராட்சி புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, சென்னை மாநகரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது வீடுகளில் தேங்கிக் கிடக்கும் பயன்படுத்த முடியாத அல்லது தேவையற்ற பழைய பொருட்களைச் சேகரித்து அகற்றுவதற்காக, சென்னை மாநகராட்சி ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம், பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய சோபா, படுக்கைகள் போன்ற மரச்சாமான்கள், துணிகள் மற்றும் பழைய மின்னணுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்கு புதிய சேவையை கொண்டுவந்துள்ளது.

இந்தச் சேவை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும், இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர் 1913 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது 9445061913 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அல்லது கோரிக்கையைப் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நம்ம சென்னை செயலியில் பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சேகரிக்கப்படும் பொருட்கள் மாநகராட்சியால் பாதுகாப்பாக எரிக்கப்படும் என்றும், தேவையற்ற மற்றும் பழைய பொருட்களைச் சரியான முறையில் அப்புறப்படுத்தி, சென்னையைத் தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது‌.

so, உங்க வீட்டில் பழைய பொருட்கள் இருந்தால் இனி no டென்ஷன்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News