சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவில் உருவாகிய புதிய செய்தி செயலியான ‘அரட்டை’ App-ஐ முழுமையாக வளர்க்க தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இலவசமாகப் பெறக்கூடிய இந்த செயலி, பயன்படுத்த எளிமையானது மற்றும் பாதுகாப்பானது. இதனால் பயனாளர்களிடையே விரைவாக பிரபலமாகி வருகிறது.
அரட்டை செயலியை வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகளாக பயன்படுத்தலாம். செயலியின் குளோபல் பாதுகாப்பு தலைவர் ஜெரி ஜான், சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘அரட்டை செயலி தற்போது 10 லட்சம் வாடிக்கையாளர்களைக் கடந்துள்ளது. இந்தியாவில் உருவான தயாரிப்புகளுக்கு பயனாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இதை தொடரவும், வளர்ச்சி நிலையை நிலைநாட்டவும் எங்கள் குழு உழைத்து வருகிறது. தனியுரிமை மற்றும் மதிப்பு சார்ந்த அம்சங்களில் கவனம் செலுத்தி வருகிறோம்,’ என்று தெரிவித்தார்.
அரட்டை செயலியில் உரையாடல்கள் மற்றும் வீடியோ அழைப்புகள் முழுமையான பாதுகாப்புடன் அதாவது End-to-End Encryption நடைபெறுகிறது. மேலும், யுபிஐ போன்ற பல்வேறு வசதிகளை செயலியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மேலும் ஜெரி ஜான், ‘வாட்ஸ் அப்-க்கு மாற்றாக பயன்படுத்தப்படுமா என பயனாளர்கள் கேட்கிறார்கள். எங்கள் குழுவின் கருத்தில், அரட்டை செயலி தனித்துவமான பாதுகாப்பு மற்றும் மதிப்பிற்குரிய அம்சங்களால் பயனாளர்களுக்கு நம்பகமானதாக இருப்பதால், அவர்கள் அதை விரும்புவார்கள் என்று நம்புகிறோம். போட்டி மற்றும் புதுமைகளை கொண்டு வருவதிலும் இது உதவும்.
அரட்டை செயலியின் பெயரை மாற்றும் எண்ணம் எப்படியுமில்லை. வாடிக்கையாளர்களின் தகவல்களை மூன்றாம் நபருக்கு பகிர்வது கடுமையாக தடையாக்கப்பட்டு உள்ளது. எதிர்கால வளர்ச்சிக்கான புதிய வழிமுறைகளையும் எங்கள் ஆர்அண்ட் டி குழு ஆய்வு செய்து வருகிறது’ என்று கூறியுள்ளார்.