சர்வதேச அளவிலான வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தை வைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகள் பயணிக்கின்றனர். வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் முதன்மையான அடையாள ஆவணமாகும். இந்தியாவில் 4 விதமான பாஸ்போர்ட் வழங்கப்படுகின்றன: நீலம், வெள்ளை, மெரூன் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் உள்ளன.அது பற்றி விரிவாக பார்ப்போம்.
நீல நிற பாஸ்போர்ட்
சுற்றுலா, கல்வி, வேலை மற்றும் வணிக பயணங்களுக்கு இது பொதுவாக கிடைக்கிறது. இந்த பாஸ்போர்ட் எளிதில் வீட்டுமுகவரி, அடையாள அட்டை, வயது மற்றும் கல்விசான்று ஆதாரங்களின் மூலம் பெறலாம். தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் கீழ் நீல பாஸ்போர்ட் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
வெள்ளை நிற பாஸ்போர்ட்
இந்த பாஸ்போர்ட் அரசு அதிகாரிகள், சிவில் மற்றும் ராணுவ அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. இது அரசு பணி சார்ந்த வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. தனிப்பட்ட பயணத்திற்கு இது பயன்படுத்த முடியாது. விமான நிலையத்தில் விசா மற்றும் ஆவண பரிசோதனையில் முன்னுரிமை பெற இது உதவுகிறது.
மெரூன் (சிவப்பு) நிற பாஸ்போர்ட்
அரசுத் துறை உயர் அதிகாரிகள், வெளியுறவு சேவை அதிகாரிகள் மற்றும் தலைமை அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிறத்தில் உள்ள பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், அரசின் உயர்ந்த பொறுப்பில் இருப்பவராக அறியப்படுகிறார்கள்.
ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் (ECR)
Emigration Check Required என்ற பொருளுடைய இந்த பாஸ்போர்ட், 10-வது வகுப்பிற்கு கீழான கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதிகமான ஆவண சோதனைகளுடன் வேலைக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது?
2025-ம் ஆண்டு தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் உலகளவில் 77-வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்டின் மூலம் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். அதிலும், சக்திவாய்ந்த பாஸ்போர்ட் வகையாக மெரூன் (சிவப்பு) நிற பாஸ்போர்ட் தான் கருதப்படுகிறது.