கிருஷ்ணகிரியில் மரத்தால் மின்கம்பத்தை முட்டுக்கொடுத்து விவசாயம் செய்யும் நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே புதூர் பூங்கனயிலிருந்து தென்பெண்ணை ஆறு பாலம் செல்லக்கூடிய சாலையின் இருபுறமும் விவசாயிகள் அதிகளவில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இங்குள்ள சாலையின் ஓரத்தில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளதால், பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதனால் மரத்தால் மின்கம்பத்தை முட்டுக்கொடுத்து விவசாயம் செய்யும் நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மின் ஊழியர்கள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி, புதிய மின்கம்பத்தை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.