தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு நீதிபதி சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
இந்த வழக்கில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விஜய் பரப்புரை பேருந்தின் உள் மற்றும் வெளிப்புற சிசிடிவியில் பதிவான காட்சிகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.