மதுராந்தகம் அருகே பணி நிறைவு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை விட்டு பிரிய மனமில்லாமல் கண்ணீர்விட்டு அழுதது காண்போரை நெகிழச் செய்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த காவாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் . இவர் மதுராந்தகம் அரசு போக்குவரத்து பணிமனையில் 30 ஆண்டுகளாக கொடூர்-மதுராந்தகம் இடையே தடம் எண் 100 என்ற பேருந்தை இயக்கி வந்தார்.
இந்தநிலையில் பரமசிவம் வயது முதிர்வின் காரணமாக அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கடைசியாக ஒரு முறை பேருந்தை ஓட்டுகிறேன் எனக்கூறி, பேருந்தை முத்தமிட்டும் சீட்டில் அமர்ந்தும், பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் சக ஊழியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.