விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள விற்பட்டு ஊராட்சி தவெக கிளை செயலாளராக இருந்தவர் ஐய்யப்பன் (வயது 50). இவர் குடும்பத்துடன் சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரூரில் விஜய் பரப்புரையில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விஜய் மீது வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களை கண்டு கடும் மன உளைச்சலில் இருந்த ஐய்யப்பன் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துண்டால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அந்த கடிதத்தில் கரூரில் 41 உயிரிழப்புக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தான் காரணம் என்றும் காவல்துறை இதற்கு உடந்தையாக இருந்ததாகவும், செந்தில்பாலாஜியை கைது செய்ய வேண்டும் என எழுதியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.