Monday, September 29, 2025

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மர்மநபர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கு வெடிகுண்டு நிபணர்கள் விரைந்து செறு சோதனை நடத்தினர்.

வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதலில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. கரூரில் நடைபெறற விஜயின் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் காரணமாக 40 பேர் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News