கரூர் பிரசார கூட்டத்தில் 39 பேர் பலி., கைதாகும் விஜய்?

த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்தார்.

நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துவிட்டு கரூரில் பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரம் நடைபெறும் இடத்தில் ஏராளமானோர் திரண்டிருந்ததாலும் அங்கு மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கூட்டநெரிசலின் காரணமாக ஏராளமானவர்கள் மயங்கி விழுந்தனர். இதில் பலரும் மயக்கமடைந்தனர். இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி 39 பேர் பலியானார்கள். இதில் 10 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள், 12 பேர் ஆண்கள். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related News

Latest News