சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், கேம்ப் ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தாம்பரம் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது : தி.மு.க. கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய் தலைமையில் ஒரு கூட்டணி, சீமான் தலைமையில் ஒரு கூட்டணி என 4 கூட்டணி வர இருக்கிறது. எங்களது கூட்டணி நிலைப்பாட்டை டிசம்பர் மாதம் தெரிவிப்போம்.
எனக்கும், பாஜகவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்ததை ஏற்று கொள்ள முடியாததால் கூட்டணியில் இருந்து வெளியில் வந்தோம்.
2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைவிட வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார்.
