ரோபோ சங்கர் இறுதி ஊர்வலம் தொடங்கியது!!

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரைக்கு வந்தவர் ரோபோ சங்கர். இவர் விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என முன்னணி நடிகர்களுள் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில்,படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயக்கமடைந்தார்.அவரை உடனடியாக மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.இந்த சூழலில், நேற்று மாலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவர்கள் மாற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 9.05 மணியளவில் உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகின. இவரது மறைவுக்கு பொதுமக்களும், திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.தற்போது,ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கி விட்டது. அவரது மகள் அவ்ருக்கு இறுதி சடங்கை செய்யயுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related News

Latest News