சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பலத்த கன மழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக பழைய பேருந்து நிலையம் கிச்சிபாளையம் உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீர் குளம் போல் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் ஒரு போதை ஆசாமி பேருந்தில் இருந்து இறங்காமல் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்து மீண்டும் பள்ளப்பட்டி பணிமனைக்கு கொண்டு செல்வதற்காக அங்கிருந்து புறப்பட்டது. அப்பொழுது போதை ஆசாமி இறங்காமல் படியில் நின்றவாறு பயணத்தை மேற்கொண்டு வந்தார்.
பேருந்தில் இருந்த அரசு பேருந்து நடத்தினர் போதை ஆசாமியை எட்டி உதைத்தார். இதில் நிலை தடுமாறி பேருந்தில் இருந்து அவர் சாக்கடை கலந்த மழை நீரில் கீழே விழுந்தார். தொடர்ந்து தத்தளித்த அவர் அங்கிருந்து சென்றார்.
அரசு பேருந்து நடத்தினர் ஈவு இரக்கமின்றி போதை ஆசாமியை கால்களால் எட்டி உதைத்து அடாவடியில் ஈடுபட்ட காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
