மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாய்கள் கடித்து ஐந்து ஆடுகள் பலியான சம்பவமும் அரங்கேறியுள்ளது.
பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடிய இந்த சம்பவத்தால் விவசாய கூலித் தொழிலாளியின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெறி நாய்களைப் பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முள்ளிப்பள்ளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
