சென்னையைச் சேர்ந்த 5 பேர், கடலூர் துறைமுகத்திலிருந்து பரங்கிப்பேட்டை வரை கூகுள் மேப் வழிகாட்டுதலைப் பின்பற்றி பயணம் செய்துள்ளனர்.
மதுபோதையில் கடற்கரை மணலில் காரை ஓட்டியுள்ளனர். அப்போது திடீரென காரை கடலுக்குள் ஓட்டியுள்ளனர். சிறிது தூரம் கடலுக்குள் சென்ற கார் திடீரென நின்றுவிட்டது. மதுபோதையில் கடலில் தத்தளித்தவர்களை அப்பகுதி மீனவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
காவல்துறையினரின் உதவியுடன் டிராக்டர் மூலம் இவர்கள் பயணம் செய்த கார் கட்டி இழுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
