லண்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசினார். இந்த நிகழ்வு, பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்துவதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது என கூறினார்.
பெரியார் பேரன் என்ற கம்பீரத்துடன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படத்தை திறந்து வைத்தேன் என்றும் தற்போதைய அறிவியல் மாற்றத்துக்கு முன்பே அடிகோலிட்டவர் தந்தை பெரியார் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பகுத்தறிவு கொள்கைகளை சமூகத்துக்கு பரப்பியவர் தந்தை பெரியார் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு சொத்துரிமை, சமூக நீதி கருத்துகளை எடுத்துரைத்தவர் பெரியார் என குறிப்பிட்டார். இந்திய விடுதலை போராட்டத்தில் சமூக, சீர்திருத்த கருத்துகளை பரப்பியவர் என்றும் ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டியவர் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.