Tuesday, September 2, 2025

வடமேற்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு வங்கக்கடலில், இன்று புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல், வரும், 5 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News