கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ₹1.86 லட்சம் கோடி

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.86 லட்சம் கோடி வரி வசூலாகிய உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதம் 1-ம் தேதியன்று முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகின்றது.

நடப்பாண்டு ஜிஎஸ்டி வசூல் கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத வகையில் ரூ. 2.37 லட்சம் கோடி வசூலானது. இந்த நிலையில், ஆகஸ்டு மாதத்தில் ரூ. 1.86 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News