தமிழகம் முழுவதும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ‘ உங்களுடன் ஸ்டாலின் ‘திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் தாசில்தார், ஆர் ஐ, வி.ஏ.ஓ., கையெழுத்துடன் வைகை ஆற்றில் மூட்டையாக கட்டி வீசப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த விவகாரத்தில் திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கவனக்குறைவாக இருந்ததாக 7 அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.