Friday, August 29, 2025
HTML tutorial

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு

தமிழகத்தில் நெல்லுக்கான ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டிருக்கும் அரசாணையில், கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஆதரவு விலை சாதாரண ரக நெல்லாக இருந்தால், குவிண்டாலுக்கு ரூ.2500ம், சன்ன ரக நெல் குவிண்டால் ரூ.2545 ஆகவும் வழங்கப்படும்.

இந்த நடைமுறையானது, வரும் செப். 1 முதல் 2026 ஆக 31 வரை அமலில் இருக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News