அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது பெரும் தலைவலியாக இருக்கிறது. அதனால் இந்திய இறக்குமதிப் பொருட்கள் மீது 50% வரி விதித்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பதாக நினைத்தார்.
ஆனால் இப்போது அதுவே அமெரிக்காவுக்கு Backfire ஆகும் நிலை உருவாகியிருக்கிறது. ஏனெனில் பொருளாதார நிபுணர் Jeffery Sachs இது குறித்து அமெரிக்காவிற்கு தனது கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர், ‘அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தியாவைப் பற்றி துளியும் கவலைப்படுவதில்லை; இதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தியா நம்முடன் நெருக்கமாக இருக்க வேண்டும். சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பில் அமெரிக்காவுடன் இந்தியா இணைந்துள்ளது. மேலும் இந்தியாவிற்கு அமெரிக்கா தேவை இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு இந்தியா தேவை.
இந்தியா உலகில் சுதந்திரமான நிலைப்பாடு கொண்ட ஒரு பெரிய சக்தி. டிரம்ப் வரிகள் குறித்துச் செய்யும் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் எச்சரித்துள்ளார். மேலும் அவர், இந்தியா சீனாவுடன் நெருக்கமாக விடாமல் அமெரிக்காவுடன் நெருக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆனால் டிரம்ப் அதற்கு எதிராக செயல்படுவதால் அதை அனுமதிக்க கூடாது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் இந்தியாவிடம் மோதல்போக்கு வேண்டாம் என்று J.P. மோர்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்தது தற்போது கவனம் பெறுகிறது.