பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசியதாவது : அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக 50 சதவீதம் வரி விதித்த பாரபட்சமான நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார பாரபட்ச நடவடிக்கைக்கு ஒவ்வொரு இந்திய மக்களும் பதிலடி கொடுக்க வேண்டும். சுதேசி உற்பத்தி பொருட்களை வாங்க வேண்டும். ஆன்லைனில் அமெரிக்கா பொருட்களை இந்திய மக்கள் வாங்க கூடாது.
மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் நோக்கோடு ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது அரசு செய்யும் கடமை என்றால் நாம் அரசுக்கு செய்யும் கடமை என்பது ஆன்லைனில் பொருட்களை வாங்க மாட்டோம் என முடிவெடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.