சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உள்பட 14 உயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் கூடியது. இந்த கூட்டத்தில் நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் 14 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிஷா பானு கேரள உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரன் சத்தீஷ்கருக்கும், சத்தீஷ்கார் நீதிபதி சஞ்சய் அகர்வால் அலகாபாத்துக்கும் மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். இதைப்போல பல்வேறு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இடமாற்றத்தை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.