சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் உள்ள பாடங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்புகளில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து டேட்டா சயின்ஸ், இயந்திர கற்றல், தயாரிப்பு மேம்பாடு, கண்டுபிடிப்புகள், காலநிலை மாற்றம், வாழ்க்கைத் திறன்கள், உடற்கல்வி பாடங்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மாற்றம் செய்யப்பட்ட பாடத்திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.