இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
இதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார். அதில் சிறப்பாக செயல்படாத காரணத்தால் போட்டிகளில் அவரை ஓரங்கட்டினார்கள்.
இந்நிலையில் இன்று ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.