குளித்தலையில், வங்கி கடன் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி மாவட்டம் திருச்செந்தூர் அக்ரஹாரத்தை சேர்ந்த கீதா என்பவர், தனியார் வங்கியில் லோன் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், கரூர் மாவட்டம் காவல்காரன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வரும் பெண்ணுக்கு வங்கி கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
உரிய ஆவணங்களை பெண்ணிடம் பெற்றுக்கொண்ட கீதா, 9 லட்சத்து 41 ஆயிரத்து 180 ரூபாயை தனது வங்கி கணக்கில் வரவு வைத்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து கீதா மற்றும அவரது உதவியாளர் கார்த்திக் ஆகியோர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கீதா புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்தனர். மேலும், குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.